பெண் மருத்துவரைக் கொன்ற குற்றவாளிகளுக்கு சிறையில் மட்டன் உணவு!!

தெலங்கானாவில் பெண் மருத்துவரை வன்புணர்வு செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு பேருக்கு சிறையில் அசைவ உணவு கொடுத்து இருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இவர்கள் நான்கு பேரையும் சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் எழுந்துள்ளது.

இந்தக் கொலை தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டு தெலங்கானாவில் அதிக பாதுகாப்பு நிறைந்த செர்லபள்ளி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்ட முதல் நாள் இரவு முழுவதும் இவர்கள் தூங்கவில்லை என்று சிறை காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் செய்த குற்றத்திற்கு தூங்கினால் என்ன தூங்காவிட்டால் என்ன. அதுவல்ல கேள்வி இங்கே. இவர்கள் நான்கு பேருக்கும் முதல் நாள் மதியம் நல்ல பருப்பு உணவு வழங்கியுள்ளனர். இரவு உணவாக மாமிச உணவாக மட்டன் உணவை வழங்கியுள்ளனர். இது தற்போது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

உதவி கேட்ட பெண்ணை வன்புணர்வு செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் எப்படி குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு மாமிச உணவு வழங்கலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது.